உதகை அருகே விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டெருமை உயிரிழப்பு!

நீலகிரி: உதகை நகரில் விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: உதகை நகரில் விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீத வனப்பகுதியில் யானை, காட்டெருமை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கிராமப்பகுதிகளில் உலா வருகிறது. 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு உலா வந்த யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், இன்று காலை உதகை நகரில் உள்ள பழைய உதகை (ஓல்டு ஊட்டி) பகுதியில் தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 13 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. 



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்த காட்டெருமை குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த காட்டெருமை வயது முதிர்ந்து பழைய உதகை பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், இதுவரை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை எனவும் இருப்பினும் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...