கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் என்பவரது மகன் நவீன் குமார் (22). கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள பிரிமியர் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் கற்பகம் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இதனிடையே, தற்போது கொரோனா காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி வரும் நிலையில், பிரவீன்குமார் இரண்டாம் ஆண்டில் வைத்த அரியர் தேர்வு எழுத கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் கல்லூரிக்கு வந்துள்ளார். மேலும், மாணவர் நவீன் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் 3 நாட்கள் அவருடன் அவருடைய தாயார் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை நவீன்குமாரின் தாயார் சொந்த ஊருக்கு சென்று உள்ளார். மாலையில் செல்போனுக்கு அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் பதில் இல்லாததால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர் சென்று பார்த்தபோது நவீன்குமார் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் நவீன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மாணவர் நவீன்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.