கோவை மாநகராட்சி பகுதியில் ரூ.14.9 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி - பி.ஆர்.நடராஜன் எம்பி துவக்கி வைத்தார்!

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவை மாநகராட்சி 42வது வட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பி.ஆர்.நடராஜன் எம்.பி இன்று துவக்கி வைத்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவை மாநகராட்சி 42வது வட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பி.ஆர்.நடராஜன் எம்.பி இன்று துவக்கி வைத்தார்.



கோவை மாநகராட்சி 42வது வார்டு சுப்பநாயக்கன்புதூரில் செல்லம்மாள் நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாமல் இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினராக இருந்த வி.இராமமூர்த்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், மாநகராட்சி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியதால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜனிடம் இப்பகுதி மக்கள் மழை நீர் வடிகால் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனையேற்று, செல்லம்மாள் நகரில் மழை நீர் வடிகால் அமைக்க 14.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில், இதற்கான பணியினை வெள்ளியன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் ஜான்சன், முத்துக்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சிபிஎம் எஸ்எஸ்குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி மற்றும் விஜயலட்சுமி, சங்கர், ஆனந்தன், பாக்கியராஜ், திமுக வார்டு செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...