கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு சாவு..!

கோவை: கோவையில் இன்று இருவேறு சம்பவங்களில், வாழ்கையில் விரக்தியடைந்த 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தனர்.


கோவை: கோவையில் இன்று இருவேறு சம்பவங்களில், வாழ்கையில் விரக்தியடைந்த 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அண்ணா வீதியை சேர்ந்தவர் அஜித்குமார் (24). கூலி தொழிலாளியான இவருக்கு, குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று, அஜித்குமார் வேலைக்கு செல்லுமாறு, அவரது தாயார் அறிவுரை கூறி கண்டித்ததால், மனவேதனை அடைந்த அஜித் குமார் விரக்தியடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 42), கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால், காயமடைந்தவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த வேலுச்சாமி விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...