கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், மாநகரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக சென்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, கோவை மாநகர் பகுதிகளில் உள்ள சாலைகள், சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. மேலும், வீடுகளில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படும் மூடப்படாத டிரம்கள், தொட்டிகள் போன்றவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பாக தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, மண்டல அளவிலான அலுவலர்கள், சுகாதார துறை அலுவலர்களுடன் இணைந்து தண்ணீர் தேங்குவதை கண்காணித்து வருகின்றனர். கொசு புழுக்கள் உற்பத்தியாகுவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகள் தெளித்து வருகின்றனர். டெங்கு கொசு புழுக்கள் ஒழிப்பு பணிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றோம். வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் டிரம்கள், தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றில் ஆய்வு நடத்தி அபேட் மருத்து ஊற்றப்படுகிறது. டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்பதால், சூரிய ஒளி படாதவாறு தண்ணீர் தொட்டிகள், டிரம்களை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். ஆய்வுக்கு வரும் போது, தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும், என்றார்.