காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த குளிர்பதன கிடங்குகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்; கோவையில் விவசாயிகள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்குகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குளிர்பதன கிடங்குகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தப்படியாக வேலை வாய்ப்பிலும், வருவாய் ரீதியாகவும் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, அன்னூர், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தென்னை, காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் வகை விவசாயங்கள் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் அளவில் செய்யப்பட்டு வருகிறது.

இதில், காய்கறி விவசாயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், முட்டைகோஸ், பாகற்காய், புடலை, பீட்ரூட், அவரை உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள், வீணாவதை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் ஒடையாம்பாளையத்தில், 500 மெட்ரிக் டன், கிணத்துக்கடவு பகுதியில் 500 மெட்ரிக் டன், சூலுாரில் 375 டன், காரமடை, தொண்டாமுத்துார், அன்னுார், பொள்ளாச்சி, செஞ்சேரி ஆகிய பகுதிகளில் தலா, 25 டன் கொள்ளளவு கொண்ட, குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இக்கிடங்குகள் முழுமையான பயன்பாட்டில் இல்லை எனவும் இதில், சில கிடங்குகள் தனியார் வசம் உள்ளதால், காய்கறிகளை சேமித்து வைக்க கட்டணம் அதிகமாக உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், அன்னுார், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல இடங்களில், குளிர்பதன கிடங்குகள் முழுமையாக பயன்பாட்டில் இல்லை. அதிக கொள்ளளவுள்ள கிடங்குகளை, பெரியவியாபாரிகள் மட்டும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகள் தேவை.

மாவட்டத்தில் தாலுக்கா வாரியாக அல்லது விவசாயிகளுக்கு ஏற்றவாறு முக்கியமான இடங்களில் மேலும் பல குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். அதனை தனியார் வசம் கொடுக்கக்கூடாது. தற்போது, சில குளிர்பதன கிடங்குகள் தனியார் வசம் உள்ளன. இதனால், கட்டணங்கள் அதிகமாகும், விவசாயிகளுக்கு பலன் இல்லை. காய்கறி விவசாயிகளுக்கு ஏற்றவாறு குளிர்பதன கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டால், சிறு விவசாயிகளும் அதிகம் பயன்பெறுவார்கள். பல கிலோ மீட்டர் தூரம் வரை காய்கறிகளை கொண்டுவந்து குளிர்பதன கிடங்குகளில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

எனவே, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...