கோவையில் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து பி.எஸ்.என்.எல் சங்கம் சார்பில் ஆயத்த ஆர்ப்பாட்டம்!

கோவை: பொதுத்துறை நிறுவனங்களை காக்கக் கோரி வரும் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தினை ஆதரித்து பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு சங்கத்தினர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆயத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொதுத்துறை நிறுவனங்களை காக்கக் கோரி வரும் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தினை ஆதரித்து பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு சங்கத்தினர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆயத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நிதி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.



இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்தும், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை உடனடியாகத் துவங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை நிறுத்துவதோடு பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஜேடிஓ, ஜேஏஓ, ஜேஇ, டிடி ஆகிய பதவிகளுக்கு இலாகா தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். கொரோனாவால் மரணமடைந்த ஊழியர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவிகித ஓய்வுகால பலன்களை அமல்படுத்திட வேண்டும். அங்கீகாரப் பட்டியலிலுள்ள மருத்துவமனைகளில் ரொக்கப் பரிமாற்ற சிகிச்சையை உத்தரவாதம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு ஜிடிஐ (Group term insurance) அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், எப்என்டிஇ மற்றும் டிஇபியு ஆகிய சங்கத்தினர் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் எஸ்.மகேஸ்வரன், என்எப்டிஇ மாநில துணை செயலாளர் ராபர்ட், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குடியரசு ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...