திருப்பூரில் கோவில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் 11.60 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொது மக்களுக்கு தெரிவிக்காமல் இந்து அறநிலையத்துறையினர், திருப்பூர் போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, மாநகர காவல்துறைக்காக 2013 முதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கோவில் நிலத்தில் காவல் நிலைய புதிய கட்டிடம், காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ளது.



இந்நிலையில், கோவில் பயன்பாட்டுக்கு நிலம் வேண்டும், கோவில் நிலத்தை போலீசாருக்கு வழங்கக்கூடாது என 7 ஊர் பொது மக்கள் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை ஆண்டிபாளையம் கோவில் நிலத்தில் திருப்பூர் மாநகர போலீசார் பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் திடீரென்று முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.சி சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.எஸ்.பி மோகன் மற்றும் தெற்கு ஏ.சி நவீன் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்று தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நாளை திருப்பூர் போலீஸ் கமிஷனர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்த பிறகு தர்ணா போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆண்டிபாளையம் பகுதியில் காலை முதலில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...