பொள்ளாச்சி அருகே குடிபோதையில் அதிவேகமாக காரை இயக்கி மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது - மூதாட்டி உயிரிழப்பு!

கோவை: பொள்ளாச்சி அருகே குடிபோதையில் அதிவேகமாக காரை இயக்கி மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே குடிபோதையில் அதிவேகமாக காரை இயக்கி மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



பொள்ளாச்சி அருகே உள்ள நல்லாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து, இவரது தாயார் கண்ணம்மாள் (70). இவர் நேற்று அவரது வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்து, மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் கண்ணம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், காரை நிறுத்திவிட்டு ஞானசேகரன் தப்பி ஓடினார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மாள் உறவினர்கள் ஞானசேகரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோமங்கலம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஞானசேகரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...