கோவை: திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை நகரில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அதிமுகவினரால் ஒட்டப்பட்டது எனவும் இதனை கண்டித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவை நகரில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று கோவை நகரில் மீண்டும் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாகவும், கிண்டல் செய்யும் விதமாகவும் ரயில்நிலையம், லாலா கார்னர், டவுன்ஹால் உட்பட பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் ஊரடங்கில் அயராது உழைத்தவரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படத்தையும், ஊரடங்கில் விக் வைத்தவரா என திமுக ஸ்டாலின் படத்தையும் போட்டு நோட்டீசில் கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மற்றொரு போஸ்டரில் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா என விமர்சனம் செய்து நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் நோட்டீஸ் அடித்தவர் பெயர், அச்சடித்தவர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ளது. இது போஸ்டர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.