கோவை: கோவையில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ஆபத்தான கட்டிடங்களை நாளைக்குள் காலி செய்ய வேண்டும், என்று மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையானது மேலும் ஓரிரு நாட்களுக்கு தொடரலாம். எனவே, தேவையான இடங்கள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் சாலையில் தேங்கும் இடங்களில் உடனடியாக மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ரயில்வே சுரங்கப்பாதை, லங்கா கார்னர், அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் தேங்கும் மழைநீர் அவ்வப்போது அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மழையின் காரணமாக பழுதடைந்த சாலைகள் கண்டறியப்பட்டு சரி செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக முறிந்து விழுந்த மரங்கள் மாநகராட்சியின் மூலமாக உடனடியாக அப்புறப்படுத்தபட்டும், கால்வாய் அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு கோவை மாநகராட்சி சட்டம் 1981 பிரிவின்படி 327 படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 81 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், 19 கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை காலி செய்ய மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டும், இதுவரை காலி செய்யாதவர்கள் நாளைக்கு (வெள்ளிக்கிழமை) காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடபட்டப்படுளது.
எனவே, வரும் 21-ஆம் தேதி முதல் போலீசார் உதவியுடன் அவ்வாறான கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.