பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொழிற்பேட்டையை சேர்ந்தவர் புவனேஸ்வரி. வயது 30. இவரது கணவர் ராமன், சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, புவனேஸ்வரி மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் தனியே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், புவனேஸ்வரிக்கு முகநூல் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த காஜா மொய்தின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என புவனேஸ்வரி கேட்டு வந்ததாகவும், இதற்கு காஜா மொய்தீன் தயக்கம் காட்டிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி புவனேஸ்வரி அவரை அழைத்த போது கைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தெரிகிறது. இதில், கலக்கம் அடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்துகொள்ள போவதாக, காஜாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தார்.
இதை பார்த்த காஜா தொழிற்பேட்டையில் உள்ள வீட்டில் சென்று பார்த்தபோது, புவனேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.