பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயற்சித்த 45 டன் யூரியா மூட்டைகள் பறிமுதல்; குடோனுக்கு சீல்..!

பொள்ளாச்சி: தமிழக அரசு சார்பில், விவசாயிகளுக்கு வழங்கும் மானிய விலை யூரியாவை, சட்டவிரோதமாக பதுக்கி, கேரளாவிற்கு கடத்தும் சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் தமிழக -கேரளா எல்லையில் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த கணபதிபாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி சார் -ஆட்சியர் வைத்தியநாதன், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், நேற்று இரவு கணபதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, அந்த நிறுவனம், பசை தயாரிக்கும் நிறுவனம் என்பதும், விவசாயத்திற்கு பயன்படுத்தும் மானிய விலை யூரியாவுடன், ரசாயனங்களை கலந்து, பசை தயாரிப்பதும், மேலும் யூரியா முட்டைகளை பதுக்கி கேரளாவிற்கு கடத்துவதும் தெரியவந்தது. 

இதையடுத்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 45 டன் மானிய விலை யூரியாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும், குடோன் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த முஸ்தபா என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...