7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ்: கோவை மாநகராட்சி மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்தார்..!

கோவை: கோவை மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவி, எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு பின் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நேற்று சேர்ந்தார்.



கோவை: கோவை மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவி, எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு பின் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நேற்று சேர்ந்தார். 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மூலம் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட 16 மேல்நிலைப்பள்ளிகளில் உயிரியல் பிரிவில் பயிலும் 241 மாணவ-மாணவிகளில் -- ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சேதா பாக்கியம், அம்மணி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹேமலதா, ஆர்.எஸ் புரம் மேற்கு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தாரணி ஆகிய 3 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றனர். 

இதில், ஆர்.எஸ் புரம் மேற்கு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தாரணி சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது. 

இது குறித்து மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:- 

மாநகராட்சி மாணவியான, தாரணி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த செய்த சேதா பாக்கியம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து, அம்மணி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹேமலதா கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்திற்கு காத்திருக்கிறார், என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...