பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் நந்தகுமார் (22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் நந்தகுமார் (22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நந்தகுமார் அவருடன் படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நந்தகுமார், அவரது பெற்றோரிடம் அவரது காதல் குறித்து தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு உடனே திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர்கள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக தேர்விததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக நந்தகுமார் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தகுமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் 174 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...