ரயிலில் அயர்ந்து தூங்கிய கல்லூரி மாணவர்; லேப்டாப் திருட்டு...!

கோவை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (20), இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.


கோவை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (20), இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து ரயிலில் கோவைக்கு வந்தார். ரயிலில் பயணம் செய்த அவர், அயர்ந்து தூங்கிவிட்டார். இதனால், கோவையில் இறங்கவேண்டிய ரஞ்சித்குமார் மேட்டுப்பாளையத்தில் தான் இறங்கியுள்ளார்.

பின், அங்கு இறங்கி தனது உடமைகளை சரி பார்த்த போது, அவரது லேப்டாப் வைத்திருந்த பேக் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த, ரஞ்சித்குமார், மீண்டும் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து, இரயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, இரண்டாவது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த போலீஸார், விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (24) என்பதும், தச்சு தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவர் ரஞ்சித்குமாரின் பேக்கை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, போலீசார் 379-வது பிரிவில் அவரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...