மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்றதால் கோவையில் விமானப்படை ஊழியர் தற்கொலை

கோவை: சூலூர் விமானப்படை தொழில்நுட்ப பிரிவில் தர்மபுரியை சேர்ந்த முனியப்பன் (32), என்பவர் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.


கோவை: சூலூர் விமானப்படை தொழில்நுட்ப பிரிவில் தர்மபுரியை சேர்ந்த முனியப்பன் (32), என்பவர் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

முனியப்பனுக்கும் செல்வராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்வராணி தனது சொந்த ஊரான ஆத்தூருக்கு சென்றுள்ளார். பின்னர், அவர் ஊருக்கு திரும்பிய நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், செல்வராணி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், முனியப்பன் வேதனை அடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 174 பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...