பல்லடம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!

திருப்பூர்: பல்லடம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதி பாளையம் பகுதியிலுள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக விஜயன் என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார்.

கணபதி பாளையம் ராயல் அவென்யூ பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கணபதி பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, டிரான்ஸ்பார்மரில் பீஸ் போய் உள்ளது. அதனால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மின் பாதை ஆய்வாளர் எல்.ஐ. சக்திவேல் கூறியுள்ளார்.

அதன் பேரில், ஒப்பந்த தொழிலாளி விஜயன் ராயல் அவென்யூ பகுதியிலுள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் பணி செய்து உள்ளார்.



அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, திருப்பூர் பகுதியில் பணிகளின் போது மின்சாரம் தாக்கி தினந்தோறும் சிக்கி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும், பலிகடாவதும் முதலுதவி சிகிச்சை கூட அளிக்க மறுக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தொடர் கதையாகி வருவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...