வால்பாறையில் ஒரே மாதத்தில் மூன்று முறை ரேஷன் கடையை நாசம் செய்து காட்டு யானைகள் அட்டகாசம்..! பொதுமக்கள் அச்சம்!

கோவை: வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஒரே மாதத்தில் மூன்று முறை ரேஷன் கடையை நாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஒரே மாதத்தில் மூன்று முறை ரேஷன் கடையை நாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தாய்முடி எஸ்டேட். இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நியாயவிலை கடை பொருட்களை வழங்குவதற்காக ஒரே ஒரு ரேஷன் கடை தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் இயங்கி வருகிறது.



இந்நிலையில், நேற்று நள்ளிரவு இங்கு வந்த 5 காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவு, ஜன்னல் மற்றும் சுவரை உடைத்து கடையினுள் இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கோதுமை ஆகிய பொருளை தூக்கி வீசி சேதப்படுத்தியது. இதன் காரணமாக கடை முற்றிலும் நாசமானது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து அடிக்கடி ரேஷன் கடையை உடைப்பதால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த கடையை காட்டுயானைகள் மூன்று முறை உடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வனத்துறையினரும் தோட்டக் காவலர்கள், மக்கள் இணைந்து காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியில் தீ மூட்டி காவல் காத்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...