கோவையில் பண்டிகை கூட்டம் : கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதா? என கண்டறிய பரிசோதனைகளை தீவிரப்படுத்த முடிவு

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 150 பேர் முதல் 190 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக, கோவையில் 700 களில் இருந்த கொரோனா தொற்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் நோய் தடுப்பு நடவடிக்கைகளால், பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 150 பேர் முதல் 190 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக, கோவையில் 700 களில் இருந்த கொரோனா தொற்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் நோய் தடுப்பு நடவடிக்கைகளால், பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது.

இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் பெரும் அளவில் குவிந்தது. சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் மக்கள் குறிப்பாக குழந்தைகள் என கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை மக்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனால், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற அச்சம் அதிகாரிகளிடம் மற்றும் மக்களிடையே நிலவி வருகிறது.



இதனையடுத்து, கோவையில் கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா விதிமீறல்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த வாரத்தில், கோவை கடைத்தெருக்களில் தீபாவளி பண்டியை அடுத்து கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இக்கூட்டத்தால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும். எனவே, இந்த மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் சுகாதார துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டும்.

காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். தற்போது, கோவை மாவட்டத்தில் தினமும் சுமார் 4500 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் 3 ஆயிரம் பரிசோதனை கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை விரைந்து தனிமைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சி பகுதியில் தான் தற்போது தினமும் 130 பேர் வரை கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஊரக பகுதிகளில் பெரும்பாலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் ஊரக பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...