சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவை: பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தால் அது அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.



கோவை: பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தால் அது அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.



கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நீட் தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்பட வில்லை எனவும் நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது எனவும், இன்று 313 பேர் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 8,41,251 பேர் 12 ம் வகுப்பு எழுதிய மாணவர்களில் 41 சதவீதம் பேர் 3,44,485 மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் எனவும் தெரிவித்த அவர், 41 சதவீதம் படிக்கும் மாணவர்களில் 6 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது எனவும் தெரிவித்தார். நான் கிராமத்தில் படித்து வந்தவன் என்பதால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அறிந்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது எனவும் அதன் பின்னரே இன்று 313 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மருத்து படிப்பில் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக நாளையே சேரவேண்டும் என்று சொல்லி இருப்பது குறித்து விசாரித்து சொல்கின்றேன் எனவும் நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பி வந்து விட்டதால் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை பாதிப்பை சரி செய்யவும், பருவமழையால் மக்கள் பாதிக்காமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஆன்லைன் லாட்டரி தடை குறித்து சட்டம் இயற்றி இருக்கின்றோம். அதை மத்திய அரசுதான் நடைமுறைபடுத்துவார்கள் என கூறிய அவர், அவர்களிடம் தான் முழு அதிகாரம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அதேபோல, சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் இந்தியாவிலேயே நீட்டை எதிர்த்துப் போராடும் ஒரே மாநிலம் தமிழகம் என தெரிவித்த அவர், நீட்டை கொண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியில் திமுக அப்போது அங்கம் வகித்தது எனவும் தெரிவித்தார். அதை பத்திரிகையாளர்கள் யாரும் கேட்காமல் எப்போது பார்த்தாலும் நீட்டு, நீட்டு, நீட்டுன்று என கேட்குறீங்க என ஆவேசமடைந்தார்.

அப்போது 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளதற்கு பெருமை பேசுகின்றீர்கள். ஆனால், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதே என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம் அடைந்தார். 7.5 சதவீதம் என்னவென்று தெரியுமா ? தேவையில்லாமல் பேசாதீர்கள்? என கூறிய முதல்வர், நான் கிராமத்தில் இருந்து வந்தவன். 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது உண்மையில் பெருமை கொள்கின்றேன். நான் கிராமத்தில் இருந்து வந்தவன், என்ன கேள்வி கேட்குறீங்க கேள்வி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசத்துடன் அவசர அவசரமாக பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...