கோவை மாவட்டத்தில் 30 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

கோவை: கோவை மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.



கோவை: கோவை மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

கோவையில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இடிக்கப்பட்ட வீடுகளில் குடியிருந்தோருக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.



அந்த வகையில், கோவை உக்கடம் சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள பெரியசாமி வீதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பொக்லைன் மூலமாக இடித்து அகற்றினர்.



இந்த பகுதிக்கு அருகில் உள்ள நொய்யல் ஆறு மூலம் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த வீட்டில் குடியிருந்தோருக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மலுமிச்சம்பட்டி. கீரநத்தம் ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...