திருப்பூரில் பொய் திருட்டு புகார் சுமத்தி மிரட்டி ரூ.1.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு..! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு!

திருப்பூர்: திருப்பூரில் பொய்யான திருட்டு புகார் சுமத்தி மிரட்டி ஒன்றரை கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தர கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருடன் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பொய்யான திருட்டு புகார் சுமத்தி மிரட்டி ஒன்றரை கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தர கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருடன் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. அங்குள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த நிலையில், மில்லின் உரிமையாளர் சண்முக சுந்தரம் என்பவர் மணி மீது பொய்யான திருட்டுப் புகார் சுமத்தி மணி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரை மில்லின் ஓர் அறையில் அடைத்து வைத்து மூன்று நாட்கள் சித்தரவதை செய்துள்ளார்.

அதேபோல, அவருக்கு சொந்தமான 1.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாகவும், இதுகுறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், கொடுத்த புகாரை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுப்பதாகவும் கூறினார்.

மேலும், சொந்த இடத்தில் வசிக்க முடியாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக காங்கேயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் n.s.n. நடராஜ் உள்ளிட்டோர் இருந்து வருவதாகவும், புகார் குறித்து முறையிட காங்கேயம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டிய சூழ்நிலையில் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டியும், சொத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மணி இன்று குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...