குன்னூர் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது..! தடையில்லா தண்ணீர் வழங்க முடியும் என நகராட்சி அதிகாரிகள் தகவல்!

நீலகிரி: குன்னூர் ரேலியா அணையின் மொத்த கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளதால் தடையில்லா தண்ணீர் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


நீலகிரி: குன்னூர் ரேலியா அணையின் மொத்த கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளதால் தடையில்லா தண்ணீர் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணையில் நீர் இருப்பு கடந்த சில மாத காலமாக 33 அடி அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை அணையைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.



இந்த நிலையில், தற்போது உள்ள நீர் இருப்பினை கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் தடையில்லா குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும் எனவும், பெள்ளட்டி மட்டம், கரன்சி தடுப்பணைப் பகுதிகளில் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதால், குன்னூரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...