கோவையில் மூதாட்டியை தாக்கி 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை மிரட்டி, சரமாரியாக அடித்து 8 பவுன் நகை பறிப்பு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை மிரட்டி, சரமாரியாக அடித்து 8 பவுன் நகை பறிப்பு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சுந்தராபுரம், கல்லுக்குழி, தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மனைவி காளியம்மாள் (73) தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், காளியம்மாள் வீட்டில் தனியாக இருந்த போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ஒருவர் வந்தார். அப்போது, காளியம்மாள் அவரிடம் யார்? எதற்காக வந்தாய் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர் பாட்டி நீ தனியாக இருக்கிறாய் என தெரியும். உன்னிடம் இருக்கும் நகை பணத்தை கொடுத்து விடு இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

அப்போது, காளியம்மாள் என்னிடம் எதுவுமில்லை, சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கிறேன் எனக் கூறி புலம்பியுள்ளார். ஆனால், அந்த வாலிபர் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடம்பிடிக்கிறாய் என்று கூறி கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் காளியம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து, சத்தம்போட்டு உதவிக்கு அழைத்ததால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் பாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்து 4 பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...