கோவை: கோவையில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் பயணம் செய்த போது, கழிவறைக்குள் மாட்டிக்கொண்ட ஐ.டி ஊழியரை மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை: கோவையில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் பயணம் செய்த போது, கழிவறைக்குள் மாட்டிக்கொண்ட ஐ.டி ஊழியரை மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் ஸ்ரீவித்யா நகரைச் சேர்ந்தவர் ஆதி கிருஷ்ணமூர்த்தி (42). இவர் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் வந்த இவர், விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் ரயிலில் மூலம் மும்பை செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார்.
அப்போது, கோவை ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எண் -6 என்ற பெட்டியில் ஏறி அமர்ந்தார். இதனிடையே, ரயில் புறப்படும் முன்பு அவர் கழிவறைக்கு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில், கழிவறை தாழ்ப்பாள் பழுதாகி இருந்ததால் அதை ஆதி கிருஷ்ணமூர்த்தியால் திறக்க முடியவில்லை. இதனால் அவர் கழிவறைக்குள் சிக்கி தவித்தார்.
இதையடுத்து, செல்போன் மூலம் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படை உதவி எண் 182யை தொடர்பு கொண்டு தான் கழிவறையில் சிக்கிக் கொண்டது குறித்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கழிவறையின் கதவை உடைத்து ஆதி கிருஷ்ணமூர்த்தியை மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.