கோவையில் ஐ.எஸ்.ஐ தரச்சான்றுடன் மட்டுமே மின்சாதனங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

கோவை: கோவையில் மின்சாதனங்கள் ஐ.எஸ்.ஐ தரச்சான்றுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் மின்சாதனங்கள் ஐ.எஸ்.ஐ தரச்சான்றுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மின்சார பாதுகாப்பு கருவிகள் தர கட்டுப்பாட்டு சட்டம் 2003 மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு தரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1997 ஆகியவற்றை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் அலுவலராக 14.8.2020- முதல் அந்தந்த மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மின் சாதன உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையகங்கள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை எந்தவித முன்னறிவிப்புமின்றி பொது மேலாளர் அல்லது மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும்.

இந்த ஆய்வின் போது உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பவும், நிர்ணயிக்கப்பட்ட தர அளவின்படி இல்லாத மின்சாதன பொருட்கள் மற்றும் எண்ணை அழுத்த அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்யவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பான நிறுவனங்கள் இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற பொருள்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...