கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் தோட்டத்து வேலி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தடாகம், சிறுமுகை, நரசிபுரம், ஆனைகட்டி, கணுவாய் உட்பட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் குடிநீருக்காக ஊருக்குள் வருவது வழக்கமாகி கொண்டிருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் அதனை வெடி வைத்து விரட்டி வந்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல, அடிக்கடி ஊருக்குள் வந்து பல்வேறு விதமான பயிர்களை நாசம் செய்து செல்வது வழக்கம். இதனிடையே, தற்பொழுது தொடர்ந்து பருவ மழை பெய்வதால் நீர்ப்பெருக்கு அதிகமாக இருப்பதால் யானைகள் மீண்டும் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வர தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த பெத்திக்குட்டை புதுக்காடு பகுதியில் வசிக்கும் முருகேசன் (40) என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் மின்சார வேலி அமைத்து, வாழை மரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காக ஊருக்குள் வந்த போது, வாழைத்தோட்ட மின்சார வேலியில் பட்டு, தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அதைப் பார்த்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சிறுமுகை போலீசார் ஆண் யானையை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வாழைத் தோட்டத்தின் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.