சிறு குறு படத் தயாரிப்பாளர்களை காப்பதே எங்களது அணியின் நோக்கம் : திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக போட்டியிடும் ராமசாமி கோவையில் பேட்டி

கோவை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக போட்டியிடும் ராம நாராயணன் முரளி என்கிற ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


கோவை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக போட்டியிடும் ராம நாராயணன் முரளி என்கிற ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசுகையில், தமிழகம் முழுவதும் 4500 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் உள்ளனர் எனவும், இதில் 1307 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றார். தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம் எனவும், கோவை மாவட்டத்தில் உள்ள 62 தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட கோவை வந்துள்ளதாக தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 4 அணிகள் போட்டியிடும் நிலையில் தங்களது அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தங்களது அணி வெற்றி பெறும் பட்சத்தில் சிறு குறு திரைப்பட தயாரிப்பாளர்களை பாதுகாப்போம் என தெரிவித்த அவர், திரையரங்க உரிமையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து குறைகளைக் களைய முற்படுவோம் என தெரிவித்தார்.

மேலும், கேளிக்கை வரிக்கு வரி விலக்கு அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனவும் ஓ.டி.டி தளங்களில் திரைப் படங்கள் வெளியாவதை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். ஆனால், திரைப்பட அனுபவத்தை ஓடிடி தளங்களில் உணர இயலாது எனவும் தெரிவித்தார்.

400 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகாமல் உள்ள நிலையில் அவற்றை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சிறு பட்ஜெட் திரைப்படங்களை தொலைக்காட்சிகளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, செயலாளர் ராஜேஷ், செயற்குழு உறுப்பினராக போட்டியிடும் தங்கம் சேகர் நீலகிரிஸ் முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...