திருப்பூர்: பிஏபி சட்ட விதிகளின்படி வெள்ளகோவில் கிளை வாய்காலுக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படுவதில்லை எனவும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், பாசன தேவைக்கும் முறையாக தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்காலில், பிஏபி சட்ட விதிகளின்படி ஏழு நாள் பாசனம், ஏழு நாள் அடைப்பு என மாதத்திற்கு இரண்டு சுற்று தண்ணீர் விட வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்காமல் 14 நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது என்றும், மீதமுள்ள 28 நாட்கள் அடைக்கப்படுகிறது, என விவசாயிகள் புகார் அளித்தனர்.
இதனால், புன்செய் விவசாயம் செய்யும் அளவிற்கு விவசாயிகள் திட்டமிடப்பட்டுள்ள சூழலில், வெள்ளகோவில் கால்வாயின் மூலம் தற்போது தங்களுக்கு கிடைக்கும் நீரை வைத்து ஆடு மாடுகளுக்கான, தண்ணீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் ஆரம்ப காலத்தில் பிஏபி சட்ட விதிகளின்படி ஏழு நாள் பாசனமும் ஏழு நாள் அடைப்பும் என தொடர்ந்து 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினர்.
மேலும், அப்போதைய நிலையில் தண்ணீர் கடைமடை கிராமங்களுக்கு கூட நீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. ஆனால், தற்பொழுது திருமூர்த்தி மலை வாய்க்கால் துவக்கத்திலேயே பல்வேறு இடங்களில் விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருவதால், கடை மடை விவசாயிகளுக்கு சிறிதளவு கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்று மனுவில் தெரிவித்தனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த விவசாயிகள், தங்களுக்கு ஆரம்பகால படி 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும், தண்ணீர் திருட்டை தடுத்து கடைமடை கிராமங்களுக்கும் நீர் தண்ணீர் சென்றடைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.