கோவையில் ரோந்து பணியில் இருந்த தலைமை காவலரை தாக்கிய அண்ணன், தம்பி கைது!

கோவை: கோவையில் தலைமை காவலரை தாக்கிய அண்ணன், தம்பியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் தலைமை காவலரை தாக்கிய அண்ணன், தம்பியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருபவர் பாபு (38). இவர் நேற்று முன்தினம் ரத்தினபுரி அண்ணாநகர் வழியாக ரோந்து சென்றார். அங்கு சில வாலிபர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த காவலர் பாபு தாக்குதல் நடத்திய வாலிபர்களைத் தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த 3 வாலிபர்கள் தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த சைக்கிள் செயினால் காவலர் பாபுவை தலை மற்றும் கையில் தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த பாபுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து காவலர் பாபு ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாபுவை தாக்கியவர்கள் இரத்தினபுரி அண்ணாநகரைச் சேர்ந்த மங்கல நாதன் என்பவரது மகன் ஆகாஷ் (22), விக்னேஷ் (18) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அண்ணன் மற்றும் தம்பியை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...