கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (50) கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 14-ந் தேதி இவர் துடியலூர் கவுண்டர் மில் பேருந்து நிறுத்தம் அருகே குடிபோதையில் நின்றிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கனகராசுக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பின்னர், இதுகுறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மூன்று நாட்களுக்கு பிறகு பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...