கோவையில் கணவர் வீட்டிற்கு தீபாவளி கொண்டாட வந்த பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் கணவர் வீட்டிற்கு தீபாவளி கொண்டாட வந்த பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கணவர் வீட்டிற்கு தீபாவளி கொண்டாட வந்த பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் மைல்கல் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 32), மில் தொழிலாளி. இவருக்கும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரீத்தி (28) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

பிரீத்தி கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அதனால் அவர் தனது தாயாருடன் கிருஷ்ணகிரியில் தனது இரண்டு மகள்களுடன் தங்கி வேலைப்பார்த்து வந்தார்.

இந்நிலையில், தீபாவளியை கொண்டாடுவதற்காக ப்ரீத்தி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு அன்னூரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அன்பரசன் வெகு நாட்களுக்கு பிறகு மனைவி மகள்களை பார்த்த மகிழ்ச்சியில் இருந்து வந்த நிலையில், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடினார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக திடீரென கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ப்ரீத்தி விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், இதுகுறித்து அன்னூர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...