கோவை: தமிழகத்தில் மிகப்பெரிய மாட்டுச்சந்தையாக விளங்கி வருவது பொள்ளாச்சி மாட்டு சந்தை.

தற்போது, திப்பம்பட்டியில் செயல்பட்டு வரும் இந்த சந்தைக்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வியாழன் என இரண்டு தினங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம், அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து, 2000 க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வரும்.
இதனால், இங்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வந்தனர். இதில், 90 சதவீத கால்நடைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 8-ம் மாதங்களுக்கு மேலாக மாட்டுச்சந்தை சரிவர செயல்படவில்லை.
மேலும், கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கேரளாவில் அனுமதி மறுக்கப்பட்டதால், இத்தொழிலை நம்பியிருந்த, வியாபாரிகளும் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முதல் கேரளாவுக்கு வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கபட்டுள்ளதால், இன்று திப்பம்பட்டி மாட்டுச் சந்தையில் 1,500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது.

எட்டு மாதங்களுக்குப் பிறகு மாட்டுச்சந்தை களை கட்டியது, வியாபாரமும் சூடு பிடித்தது. இதனால் வியாபாரிகளும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.