கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை வேட்டைகாரன்புதூர் கால்வாயில் இன்று உடைப்பு ஏற்பட்டுள்ளது.

பிஏபி தொகுப்பு அணைகளில் முக்கிய அணையான ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. புதிய ஆயக்கட்டில் உள்ள வேட்டைகாரன்புதூர் கால்வாய்க்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

அப்போது, தண்ணீர் திறக்கப்பட்டு சில மணி நேரத்தில் கால்வாய் துவங்கும் ஐந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பாசனத்திற்கு திறந்துவிட்டப்பட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்டைகாரன்புதூர் கால்வாயில் 5 ஆயிரத்து 623 ஏக்கர் பயன் பெறும் நிலையில், தற்போது உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் கால்வாயை சீரமைக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.