கோவையில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள்..! பெற்றோர்கள் முன்னிலையில் போலீசார் சமரச பேச்சுவார்த்தை!

கோவை: கோவையில் துடியலூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்த நிலையில், பெற்றோர்களுடன் சமரசம் செய்து மணமகனுடன் மணப்பெண் அனுப்பி வைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் துடியலூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்த நிலையில், பெற்றோர்களுடன் சமரசம் செய்து மணமகனுடன் மணப்பெண் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை கூடலூர், ஜோதிபுரம், சாரங்கி நகர் பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவருடைய மகன் கார்த்திக் (23), கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, சேத்து குடி புதூர், காந்திஜி நகர் பகுதியில் வசிக்கக்கூடிய ஐயூப்கான் மகள் முசாபர் பாத்திமா (19), இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் அவர்களுடைய பெற்றோருக்கு தெரிய வர பெண்ணை வீட்டில் வைத்து பூட்டி வேறு ஒரு திருமணம் செய்வதற்கு முயற்சி எடுத்துள்ளனர். இதில் சம்மதம் தெரிவிக்காத பாத்திமா அழுது புலம்பி கடைசியில் வீட்டை விட்டு கடந்த 14-ம் தேதி கோவையில் உள்ள காதலன் கார்த்திகை வந்து சந்தித்துள்ளார்.

இதையடுத்து, கார்த்திக் நண்பர்களுடன் சேர்ந்து மருதமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் முறைப்படி 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை கேள்விப்பட்ட பெண்ணின் குடும்பத்தார்கள் கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் கார்த்திக் மற்றும் பாத்திமாவை காவல் நிலையத்திற்கு அழைத்து குடும்பத்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாத்திமா பெற்றோர்களோடு செல்ல மறுத்துவிடுவே மணப்பெண் மற்றும் மணமகளிடம் முறைப்படி கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு மணப்பெண்ணை கணவனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, அவர்கள் காவல் ஆணையரிடம் மனு கொடுத்திருந்தனர். துடியலூர் காவல் நிலையம் சென்று விசாரணையை முடிக்கும்படி கூறியுள்ளனர். அதனால் காலையில் இருந்து மாலை வரை புதுமண தம்பதிகள் அலைக்கழிக்கப்பட்டதாக கூறினர். இறுதியில் சமரசம் செய்து மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பாக பேசப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...