கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 42.57 அடியாக உள்ளது. முழு கொள்ளளவை எட்டவிடாமல் கேரளா அதிகாரிகள் தண்ணீரை திறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆனால், அணையின் நீர்மட்டம் மிக குறைவான வேகத்தில் மட்டுமே உயர்கிறது.
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கேரளா அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் ரகசியமாக தண்ணீர் திறந்து விடுகிறார்கள். கோவை மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவைகளுக்காக 103.08 எம்.எல்.டி. நீர் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படுகிறது. கேரளா அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து தமிழக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார்.