கோவை முத்தண்ணன் குளக்கரையில் இதுவரை 1900 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 1900க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன, என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில், குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, அங்கு காலியாக உள்ள வீடுகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சுமார் 1900 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன எனவும் மீதம் உள்ள வீடுகளை இடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது, என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...