திருப்பூரில் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் மனு!

திருப்பூர்: திருப்பூரில் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஹர்சத் என்பவரது தந்தை முகமது மைதீன் கடந்த 2019ம் ஆண்டு இறந்த நிலையில் ஹர்சத் தந்தை நடத்தி வந்த சுல்தானியா பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஜவுளி கடை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ஸ்டார் பிரிண்டர்ஸ் என்ற கடையை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஹர்ஷத்தின் தாயார் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில் தனியாக கடை நடத்தி வந்த தனக்கு, தந்தையின் தம்பிகளான உசைன் மைதீன் மற்றும் அப்பாஸ் மைதீன் ஆகியோர் தன்னை கடைக்கு வர கூடாது எனவும் சொந்த ஊரை விட்டு வெளியேறும்படியும், மீறி வந்தால் கொன்றுவிடுவதாக மிரட்டி வருவதாக தெரிவித்தார்.



மேலும், தனக்கு வாழ்வாதாரம் இல்லாத சூழ்நிலையில் கடை நடத்த மற்றும் சொந்த ஊரில் வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சித்தப்பாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகமது ஹர்சத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...