திருப்பூரில் குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்த மழைநீர்..! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழலில் பாதுகாப்பு கருதி கயிறு கட்டி நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழலில் பாதுகாப்பு கருதி கயிறு கட்டி நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. ஜே ஜே நகர் பகுதியில் இருந்து காசிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு வர ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது.



இந்நிலையில், ஏற்கனவே சபரி ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அடிக்கடி ஓடை நீர் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓடை நீரோடு மழைநீரும் சேர்ந்து அப்பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவி வருகிறது.



இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டிலிருந்து காசிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகவும் சில நேரங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்பதால் பெண்கள் பாதுகாப்பு கருதி கயிறு கட்டி ஒருவர் பின் ஒருவர் செல்லவேண்டிய சூழல் நிலவுவதாகவும் மழை நீர், ஓடை நீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் ஏற்பட்டு தோல் நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.



மேலும், சில நேரங்களில் தேங்கியுள்ள நீர் வீடுகளுக்குள் வருவதால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...