கோவை: பொள்ளாச்சி அருகே மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஊராட்சி மன்ற துணைத் தலைவரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள சீ.மலையாண்டிபட்டினம் ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் மயில்சாமி. ஊராட்சி மன்ற துணைத் தலைவராக ரவி என்பவரும் மற்றும் 6 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக ஊராட்சி மன்றத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்,100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சாலை வசதி, குடிநீர் வசதி, போன்ற திட்டங்களை நிறைவேற்ற ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி நலத்திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் மயில்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பொது மக்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்த தீர்மானத்தில் கையெழுத்துப் போட மறுத்த ரவியை கண்டித்து முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஊராட்சி மன்ற துணை தலைவர் முட்டுக்கட்டை போடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் போலீசார் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.