கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிபபணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பொன்னையராஜபுரம், இராமகிருஷ்ணாபுரம், சொக்கம்புதூர் ரோடு, பெட்ரோல் பங்க் அருகில் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மூலம் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டும், பொன்னையராஜபுரம் பிருந்தா லே அவுட் பகுதியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தூய்மைப்பணியாளா்கள் மூலம் தரம் பிரித்து பெறப்படும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர், அப்பகுதி பொதுமக்களிடம் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கின்றார்களா என கேட்டறிந்த பின்னர், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்ய வருகின்றார்களா எனவும், சீரான குடிநீர் கிடைக்கப் பெறுகின்றனவா எனவும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து சொக்கம்பதூரில் ரூ.1 கோடியே 49 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை பார்வையிட்டு, அதனுடைய அளவுகள் சரியாக உள்ளதா என அளவுகோல் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர், அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்த ஆணையாளர் அவர்கள்.

சொக்கம்புதூர் வார்டு எண்.77 மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

தொடர்ந்து வெள்ளலூாரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள் பேருந்து நிலைய கட்டுமான வரைபடத்தினை பார்வையிட்டு பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கினை பார்வையிட்ட ஆணையாளர் அவர்கள், குப்பைக்கிடங்கில் துர்நாற்றம் வராமல் தொய்வில்லாமல் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். வார்டு வாரியாக குப்பைகளை அந்தந்த வீதிகளில் பெறப்படும்போது மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு வரும் குப்பைகளின் அளவை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர்கள் சுந்தாராஜன், ரவிக்கண்ணன், மண்டல சுகாதார
அலுவலர் லோகநாதன், சுகாதார ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.