கோவையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் குழந்தைகள் உட்பட 6 பேருக்கு தீக்காயம்..! அரசு மருத்துவமனை தீக்காய சிறப்பு வார்டில் சிகிச்சை!

கோவை: கோவையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 14-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில், தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ காயத்திற்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீக்காயத்துடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி மருத்துவர் குழு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தீபாவளியன்று கடந்த 14ம் தேதி காலை 8 மணி முதல் 15 -ம் தேதி காலை 8 மணிவரை தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு 6 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சிறுவர்கள், 2 பேர் பெரியவர்கள் என 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. அவர்கள் தீக்காய சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...