கோவை சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வட மாநில பெண்கள் கைது - 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவை சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வட மாநில பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வட மாநில பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து சூலூர் உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் நேற்று தனியார் வாட்டர் சப்ளை அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியில் சோதனை நடத்தினார்.

அப்போது, அங்கிருந்த இரண்டு பெண்கள் பையுடன் தப்பிச் செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்த போது, பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் பீகாரைச் சேர்ந்த ரூபி தேவி (34), பிந்து தேவி (40). என்பது தெரியவந்தது. இவர்கள் பீகாரில் இருந்து கஞ்சா கொண்டுவந்து, சூலூர் பகுதியில் உள்ள வடமாநில வாலிபர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...