கோவை: கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் கோவை மண்டலம் சார்பில் பொது வேலை நிறுத்த ஆய்வுக்கூடம் நடைபெற்றது.
கோவை: கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் கோவை மண்டலம் சார்பில் பொது வேலை நிறுத்த ஆய்வுக்கூடம் நடைபெற்றது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் வருகின்ற 26ம் தேதி அனைத்து தொழிற்சங்களின் சார்பில் வேலை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாகவும் வேலை நிறுத்தம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச மாநில பொதுச் செயலாளர் சிவபிரகாசம், இந்த கூட்டம் மத்திய அரசினுடைய தொழிலாளர் விரோத போக்கு, மக்கள் விரோத போக்கு, விவசாய விரோத போக்கினை கண்டித்தும், அதேபோல் டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிறது என்று கூறினார்.
டாஸ்மாக் சங்கங்கள் பலமுறை பணியாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து வருகின்ற 26ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது நடைபெற்று வரும் இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசு, டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளையும் அதே போல இடர்பாடுகளை இந்த நிர்வாகம் சரிசெய்து தர வேண்டும் என கோரிக்கையை வைத்தவர், 20% போனஸை 10% மாக மாற்றியதை 50% மாக வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.