கோவை வடவள்ளி அருகே வங்கியில் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்த இன்ஜினியரிடம் போலீசார் விசாரணை..!

கோவை: கோவை வடவள்ளி அருகே நேற்று கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்த இன்ஜினியரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை வடவள்ளி அருகே நேற்று கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்த இன்ஜினியரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையில் கடந்த ஆண்டு கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆர்.எஸ்.புரம்., குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் முயற்சியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 11 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று வடவள்ளி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கள்ள நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியில் அமைந்துள்ளது ஐசிஐசிஐ தனியார் வங்கி. இந்த வங்கியின் மேலாளர் கோகுல்நாத் (25) நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அந்த புகாரில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹித்தீஷ் ஆனந்த் என்பவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை (500 ரூபாய் நோட்டுகளாக) டெபாசிட் செய்தார் எனவும் தொடர்ந்து அந்தப் பணத்தை பரிசோதனை செய்தபோது அதில் 40 நோட்டுகள், கள்ள நோட்டுகளாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வடவள்ளி போலீசார் ஆனந்தை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கள்ள நோட்டு பணப்புழக்கத்தின் பின்னணியில் யார் உள்ளார் உள்ளிட்ட பல்வேறு கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் போலீஸ் தனிப்படை ஒன்று ஊட்டி விரைந்து உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தொடர்ந்து ஆனந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...