பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை, சுற்றுவட்டார கிராம பகுதி மொத்த மற்றும் கோவை, பொள்ளாச்சி, கேரளாவிலிருந்து வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வரை மார்க்கெட்டுக்கு சின்னவெங்காயம் வரத்து மிதமாக இருந்ததால், அதன் விலை ஒருகிலோ ரூ.35 முதல் ரூ.40வரை என குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. அதன்பின், தொடர் மழை காரணமாக மார்க்கெட்டுக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில், சின்ன வெங்காயம் வரத்து மிகவும் குறைந்தது. இதன் காரணமாக, பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடு வென உயர்ந்தது.
கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் அதிகபட்சமாக ரூ.120வரை விற்பனையாகி வந்தது. நேற்றைய நிலவரப்படி, சின்னவெங்காயம் மொத்த விலை ஒருகிலோ ரூ.90 வரையிலும். சில்லரை விலைக்கு ஒருகிலோ ரூ.100 வரை, என கூடுதல் விலைக்கு விற்பனையானது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.