கோவையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் பல பகுதிகளில் நீர் தேக்கம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

கோவை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கோவை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 



கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. மேலும், பகல் நேரத்தில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது, இந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது, மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. 

கோவையில், நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், காந்திபுரம், ஆர்எஸ் புரம், ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர் அவினாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் மழை வெள்ளம் சாலைகளில் ஆறு போல ஓடியது இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 



மாவட்டம் முழுவதும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதேபோல், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஆலாந்துறை, மாதம்பட்டி, பேரூர், மதுக்கரை, தடாகம் கணுவாய் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 

மேலும், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...