நமது அம்மா நாளிதழில் வெளியான வேல் யாத்திரை தலையங்கத்தை பணிச்சுமையால் பார்க்கவில்லை - பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம்!

கோவை: நமது அம்மா நாளிதழில் வெளியான வேல் யாத்திரை தொடர்பான தலையங்கத்தை பணிச்சுமை காரணமாக பார்க்கவில்லை என்று பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



கோவை: நமது அம்மா நாளிதழில் வெளியான வேல் யாத்திரை தொடர்பான தலையங்கத்தை பணிச்சுமை காரணமாக பார்க்கவில்லை என்று பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு அருகே தனியார் ஹோட்டலில் பா.ஜ.கவில் பல்வேறு தொழில் துறையினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், பா.ஜ.கவில் தொழில்முனைவோர் இளைஞர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இணைந்து வருவதாகவும் இதற்கு பிரதமர் மோடியின் ஊழற்ற ஆட்சியால் தினமும் பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர் என்றார்.

தொழில்துறையைச் சார்ந்த 120 பேர் இன்று கோவையில் பா.ஜ.கவில் இணைகின்றனர் எனவும் பா.ஜ.கவின் மிகப்பெரிய வளர்ச்சியை இது காட்டுகின்றது என தெரிவித்த அவர், ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை போல பா.ஜ.கவில் பல அதிகாரிகள் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல, வேல்யாத்திரை நாளை திட்டமிட்டபடி தருமபுரியில் துவங்குகின்றது என கூறிய அவர், தமிழகத்திற்கு 21ம் தேதி அமித்ஷா வருகையின் போது பெரிய அளவிலான வரவேற்பு அளிக்க உள்ளதாக கூறினார். அமித்ஷா வருகையின் போது யாரையெல்லாம் சந்திக்கின்றார் என்ற தகவல் தற்போது இல்லை என கூறிய அவர், அரசு மற்றும் கட்சி நிகழ்வில் கலந்து கொள்கின்றார் என தெரிவித்தார்.

மேலும், பணிச்சுமை காரணமாக நமது அம்மா நாளிதழில் வேல்யாத்திரை குறித்து என்ன வந்தது என முழுமையாக தனது கவனத்திற்கு வரவில்லை என தெரிவித்த அவர், நாளிதழில் என்ன வந்தது என்பது குறித்தும் எங்கள் கட்சி நிர்வாகி என்ன சொன்னார் என்பது குறித்து பார்த்த பின்னரே இது குறித்து கருத்து சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து கட்சி தலைமை, பாராளுமன்ற குழு முடிவு செய்யும் என தெரிவித்தவர், கந்தசஷ்டி கவசம், முருகன் பெருமானை இழிவுபடுத்தியதை யாருமே விரும்பவில்லை எனவும் மனம்புண்பட்ட பக்தர்களை ஆறுதல் படுத்தவும், மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லவும், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கவும் வேல்யாத்திரை நடத்தப்படுகின்றது என தெரிவித்தார். வேல்யாத்திரை குறித்த வழக்கில் நீதிமன்றம் சொல்வது குறித்து இங்கு பேசுவது சரியானது கிடையாது எனவும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கின்றது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது என கூறிய அவர் தீவிரவாதிகளை கையாள்வதில் சில வழக்குகளில் தமிழக அரசு சிறப்பாக இல்லை என பா.ஜ.க மூத்த தலைவர்கள் சொல்லி இருப்பார்கள் எனவும் துணைவேந்தர் அதிகாரத்தில் தலையிட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர் எனவும், அவர் மீது எந்த குற்றசாட்டும் இல்லாத நேரத்தில் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் துணைவேந்தரை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினர்.

மேலும், துணைவேந்தர் சூரப்பா அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு பணிகளை செய்தார் என தெரிவித்தவர், சூரப்பா மீதான குற்றசாட்டுகளை அவர் சந்திப்பார் எனவும் அவர் மீதான குற்றசாட்டுகளை அவர் எதிர்கொள்வார் எனவும் இதில் பா.ஜ.க கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

மேலும், இப்போதைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க இருக்கின்றது எனவும் அமித்ஷா வரும் போது பா.ஜ.க தொண்டர்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும் எனவும் அமித்ஷா தேர்தலின் போது சென்ற இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்று இருப்பதால் அது எதிர்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...