கோவை: பொள்ளாச்சி தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து 2,042 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில், பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 575 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் இருந்தனர்.
இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் வைத்தியநாதன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனிடையே, வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், சிறப்பு முகாம்கள் மூலம், விண்ணப்பித்த நபர்களில், 184 ஆண் வாக்காளர்களும், 208 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கை வாக்காளரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்காளர் பட்டியலில், இறந்தவரின் பெயர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 2042 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 653 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 265 பெண் வாக்காளர்களும் 26 திருநங்கைகளும் உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.